வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:27 IST)

தனி விமானத்தில் ஆஸி புறப்பட்டார் ரோஹித் ஷர்மா!

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தனிவிமானத்தில் புறப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னர் அவர் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார். அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தனது உடல்தகுதியை நிருபிக்க பயிற்சிகள் மேற்கொண்டு சில நாட்களுக்கு முன்னர் உடல் தகுதியை நிரூபித்தார்.

இதையடுத்து அவர் இன்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பயிற்சி மேற்கொண்டு அதன் பின்னர் அவர் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட உள்ளார்.