வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:51 IST)

திருமணம் வரை சென்று பிரிந்த விஜயகாந்த் ராதிகா காதல் – காரணம் இதுதானா?

நடிகர்கள் ராதிகா மற்றும் விஜயகாந்தின் திருமணம் ஏன் நின்று போனது என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பல நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதே போல பல நடிகர், நடிகைகளின் காதல் திருமணம் வரை சென்றதில்லை. அப்படி ஒரு காதல் ஜோடியாக விஜயகாந்தும் ராதிகாவும் காதலித்து அது திருமணம் வரை சென்றும் அவர்கள் திருமணம் நடக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதுபற்றி அண்மையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் ‘இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மைதான். அந்த கல்யாணத்துக்காக ராதிகா திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்திருந்தார். ஆனால் விஜயகாந்தின் சில நண்பர்கள் அவரின் ஜாதகப்படி ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என சொன்னதால் விஜயகாந்த் தனது முடிவை மாற்றிக்கொண்டார்’ எனக் கூறியுள்ளார்.