வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

முதல் இன்னிங்ஸை நிதானமாக தொடங்கிய இந்தியா:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை நிதானமாக தொடங்கியுள்ளது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் பும்ரா, ஷமி ஆகியோரின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 64 ரன்கள் எடுத்தார்
 
இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சில் நேற்று தொடங்கியது. நேற்று இந்திய அணி 13 ஓவர்கள் சந்தித்து 21 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதால் இந்திய அணி நிதானமாக தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேஎல் ராகுல் 9 ரன்களும் ரோகித் சர்மா 9 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி நிதானமாக விளையாட அல்லது அதிரடியாக விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்