ரோஹித், மயங்க் நிதான ஆட்டம் – வலுவான நிலையை நோக்கி இந்தியா !

Last Modified புதன், 2 அக்டோபர் 2019 (13:22 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி உடன் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துவிட்டன. அடுத்ததாக டெஸ்ட் தொடர் இன்று விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் ரோஹித் ஷர்மாவும் அஸ்வினும் மற்றும் சாஹாவும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகின்றனர். இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாட இந்தியா 47 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 141 ரன்கள் சேர்த்துள்ளது.

ரோஹித் 81 ரன்களுடனும் மயாங்க் அகர்வால் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :