செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (19:14 IST)

5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் விலகல்: கேப்டன் இவர்தான்!

rohit sharma
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே வரும் 1ஆம் தேதி 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது