ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (07:20 IST)

இலக்கை நெருங்கிய அயர்லாந்து: 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

india vs ireland1
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
 
நேற்றைய 2-வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. நட்சத்திர பேட்ஸ்மேன் தீபக் ஹூடா சதம் அடித்தார் என்பது சஞ்சு சாம்சன் 77 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 226 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி மிக அபாரமாக விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது