திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (19:53 IST)

ரோஹித் சர்மா அபார சதம்: 2வது இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதானமாக ஆடி வருகிறது
 
சற்றுமுன் வரை இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் ரோகித் சர்மா அபாரமாக சதமடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புஜாரா 47 ரன்கள் எடுத்துள்ளார் 
 
முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்ட நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது 
 
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதானமாக ஆடி வருவதால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் கடந்த சில போட்டிகளில் சோபிக்காமல் இருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சதம் அடித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு கண்டிப்பாக தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது