வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (10:46 IST)

மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோ… பந்துவீசுவேன் என அடம்!

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் தனது அத்துமீறல்களால் பிரபலம் ஆகி வருகிறார் ஜார்வோ.

நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்களுக்கு இடையிலான ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜார்வோ என்ற நபரும் கவனம் ஈர்த்துள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்துக்கு வந்து பேட் செய்வேன் என அடம்பிடித்தார். அப்போது அவரைக் காவலாளிகள் அங்கிருந்து அகற்றினர்.

அதேபோல மூன்றாவது டெஸ்டிலும் முழு கிட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்து பேட் செய்வேன் என மீண்டும் அடம்பிடித்தார். அப்போதும் காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்நிலையில் நேற்று இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அவர் தான் பந்துவீசுவேன் எனக் கூறி அடம்பிடித்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ மீதும் மோதினார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். ஜார்வோவின் தொல்லையால் போட்டி 5 நிமிடம் தடைபட்டது.