வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (17:09 IST)

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… நடையைக் கட்டிய ராகுல்!

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது முதல் விக்கெட்டாக தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுலை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து சிறப்பாக விளையாடி 290 ரன்கள் சேர்த்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதையடுத்து ஆடிய இந்தியா நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் நிதானமாக ராகுலும், ரோஹித் ஷர்மாவும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 46 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் கீப்பர் பேர்ஸ்டோ வசம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போது இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.