புதன், 12 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (11:00 IST)

சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

tennis
சென்னை ஓபன் டென்னிஸ் ; இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை
கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகல் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் ருதுஜா போஸ்லா உடன் ஜோடி சேர்ந்த கர்மன், இந்தியாவின் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீஸ் இணையை 3-6, 7-6, 10-4 என வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினர்.
 
இதன் மூலம் ருதுஜா போஸ்லா, கர்மன் இணை, இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.