குணமடைந்து வரும் கமல்: மருத்துவமனை தகவல்!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நலம் குறித்து அம்மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக கமல் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். அவர் டுவிட்டரில் கூறிப்பிட்டதாவது, அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நலம் குறித்து அம்மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் குணமடைந்து வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.