கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வித்தியாசமாக நிதியுதவி அளிக்கும் ஆர் சி பி!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகியவை மோதுகின்றன.
கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் இப்போது அமீரகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி மும்பையை வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான ஆர் சி பி அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கே கே ஆர் ஆகியவை மோதுகின்றன. இந்த சீரிஸில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 5 வெற்றிகளோடு மூன்றாம் இடத்தில் உள்ள ஆர் சி பி அணி. கொல்கத்தா அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று நீல நிற ஜெர்ஸியில் விளையாட உள்ள ஆர் சி பி அணி வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் நிதி திரட்டி அந்த தொகையை முன்களப் பணியாளர்களுக்கு அளிக்க உள்ளனர். இந்த நிதியை ஸ்பான்சர்கள் வழங்க உள்ளனர்.