1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Student attacked teacher in delhi

சரியாக உட்கார சொன்ன ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கிய மாணவர்!

ஆசிரியர்
டெல்லியில் மாணவரை சரியாக உட்கார சொன்ன ஆசிரியர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் உள்ள் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே சில முறை தேர்வில் தோல்வி அடைந்து இப்போது படித்து வருகிறார். இந்நிலையில் அவர் வகுப்பில் முறையாக உட்காரததால் ஆசிரியர் அவரை சரியாக உட்கார சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இது சம்மந்தமாக தகவல் காவல்துறைக்கு செல்ல, அவர்கள் லலித்தைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது இணையத்தில் பலமான கண்டனத்தைப் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தாயையே குத்திக் கொன்ற இளைஞர்… போதையில் நடந்த விபரீதம்!