கோஹ்லிதான் ஆர்.சி.பி. கேப்டன் – புதிய பயிற்சியாளர் திட்டவட்டம் !

Last Modified சனி, 21 செப்டம்பர் 2019 (10:05 IST)
ஆர்.சி.பி அணிக்கு கோஹ்லிதான் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவார் என அந்த அணியின் புதிய பயிற்சியாளர் கேடிச் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது கேப்டன்சியின் சிறப்பை நிரூபித்த கோஹ்லி இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளார். அவர் அந்த அணிக்கு தலைமையேற்று 7 ஆண்டுகள் ஆனபோதும் இன்னமும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதனால் அந்த அணி நிர்வாகிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் இயக்குநராக நியூஸி.யின் மைக் ஹெஸன், தலைமைப் பயிற்சியாளராக சைமன் கேடிச் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆர் சி பி அணி குறித்து பேசியுள்ள கேடிச் அடுத்த தொடரிலும் கோஹ்லியே கேப்டனாக தொடர்வார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘விராட் கோஹ்லியுடன்   பணியாற்றுவதில் தயக்கம் எதுவும் இல்லை.  கடந்த காலத்தில் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவருக்கும் அது புரிந்திருக்கும். எங்கள் ஆலோசனை பெற அவர் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :