ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (05:53 IST)

வெற்றியின் விளிம்பு வரை போட்டியை கொண்டு சென்ற தோனி!

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
162 என்ற பெங்களூரு அணி கொடுத்த இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. ஒரு கட்டத்தில் ஐந்து ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை சிஎஸ்கே அணி இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையே இருந்தது. 
 
ஆனால் தோனியும் ராயுடுவும் ஓரளவுக்கு பொறுப்பாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்ட தோனி முதல் பந்தில் 4 ரன்கள், 2வது, 3வது பந்துகளில் சிக்ஸர்கள், 4வது பந்தில் 2 ரன்கள் மற்றும் 5வது பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்ததால் ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தை தோனியால் அடிக்க முடியாததால் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தோனி அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இருப்பினும் அணியின் தோல்வியால் அவர் சோகமாகவே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
 
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி, அடுத்த சுற்று செல்ல ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த பார்த்தீவ் பட்டேல் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.