புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (21:48 IST)

162 ரன்கள் இலக்கு: பெங்களூரை வெளியேற்றுமா சென்னை?

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது
 
பெங்களூரு அணியில் பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மோயின் அலி 26 ரன்களும், டிவில்லியர்ஸ் 25 ரன்களும், நாத் 24 ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ரன்கள் எடுத்தது
 
சென்னை அணியின் தீபக் சஹார், ஜடேஜா, பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடவுள்ளது
 
இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. பெங்களூரை சென்னை வெளியேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்