வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:12 IST)

ரோஹித் வேண்டாம்… கோலி கண்டிப்பா வேணும்- முன்னாள் வீரர் கோபம்!

இந்திய டி 20 அணிக்கு இனிமேல் ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதை உறுதிப் படுத்துவது போல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இலங்கை அணிக்கெதிரான டி 20 தொடருக்கு அவரைக் கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில் இலங்கை தொடரில் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது குறித்து சபா கரிம் பேசியுள்ளார். அதில் “கோலியை தவிர மற்றவர்கள் அனைவரும் மோசமாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியில்லை. ஆனால் கோலி டி 20 கிரிக்கெட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாக செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்படி விளையாடாமல் இருந்தால் இந்தியாவின் நிலை என்ன ஆகியிருக்கும்” எனக் கூறியுள்ளார்.