சச்சின் தெண்டுல்கரின் பயிற்சியாளர் மரணம்
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கரில் சிறுவயது பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ரேகர் இன்று காலமானார். அவருக்கு வயது 87
சச்சின், வினோத் காம்ப்ளி ஆகியோர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியபோது அவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களுடைய திறமையை வெளியே கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் ராமகாந்த்.
இவர் சச்சினுக்கு மட்டுமின்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் பிரபலங்களான சந்திரகாந்த் பண்டிட், சஞ்சய் பாங்கர், பிரவீன் ஆம்ரே, ரமேஷ் பவார், வினோத் காம்ப்ளி, அஜித் அகர்கர் உள்ளிட்ட பலருக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலமின்றி இருந்த ராமகாந்த் இன்று மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு துரோணாச்சாரியர் விருதும் அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் ராமகாந்த் ஆச்ரேகர் என்பது குறிப்பிடத்தக்கது.