1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:01 IST)

நான் என்ன சொல்ல? தோனி விவகாரத்தில் கைவிரித்த சச்சின்

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியை பிசிசிஐ அறிவித்தது. 
 
அந்த அணியின் கேப்டனாக கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் நிரந்தமாக இருக்கும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.  
 
தோனி இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார். தோனி இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோலி ஏற்கனவே இது குறித்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது சச்சின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
 
சச்சின் கூறியது பின்வருமாறு, அணி தேர்வு குழுவினரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இது பற்றி நான் என் கருத்தைக் கூறி அது பிறர் மேல் செல்வாக்கு செலுத்துவதையும் நான் விரும்பவில்லை. 
 
தேர்வு குழு என்ன முடிவு எடுத்தாலும் அணியின், நாட்டின் நன்மைக்காக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அனைத்தும் சரி என நழுவல் பதிலை அளித்துள்ளார்.