டிராவிட்டை ஓவர்டேக் செய்த தோனி!

DHONI
Last Updated: திங்கள், 24 செப்டம்பர் 2018 (14:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனி, அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில்
இந்திய அணி வெற்றிபெற்றது. இதில் தோனி தனது 505 ஆவது போட்டியில் (டெஸ்ட் மற்று ஒருநாள்,டி20 சேர்த்து) பங்கேற்று வழக்கம் போல விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்து பாகிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்தார்.

இந்த போட்டியின் மூலமாக தோனி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
அதாவது இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றவர்களில்  பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் டிராவிட் இருந்தார். அவர் இந்தியாவுக்காக  மொத்தம் 504  ஆட்டங்களில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனி 505 போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் டிராவிட்டின் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடியவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :