1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (05:04 IST)

6 ஓவர்களில் 71 ரன்கள்: டார்க்கெட்டை நெருங்க முடியாத டெல்லி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் ஆறாவது ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் ராஜஸ்தான் 17.5 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால், டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் என்ற எளிய இலக்கு வழங்கப்பட்டது.
 
ஆனால் இந்த ரன்களை அடிக்க முடியாமல் திணறிய டெல்லி அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்