திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:03 IST)

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு: பிரபல பாடலாசிரியர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருபக்கம் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் திரையுலகினர் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை ஆவேசமாக டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடலாசிரியர் பா.விஜய் வீடியோவில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:
 
`
தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு
 
சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம் 
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்
 
கடற்கரை ஓரத்தை பூட்டி வைச்சுப்புட்டியே காவலாளி 
புயல் காத்துக்கு பூட்டி போட்டவன் யாருடா புத்திசாலி
 
ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க
எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க
 
விளம்பரத்துல தன்னையே வித்தவனைல்லாம் வீரன்ற
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவைன்ற
 
ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே
அட காவிரிக்கு மட்டும் கட்டத்தை மாத்தி தாவுறியே
 
ஆவட்டும் சாரே ஆனவரைக்கும் ஊற ஏமாத்து
எங்க பச்ச தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உன் பம்மாத்து
 
காவிரி எங்க கரிகாலனால தான் டா ஆறாச்சு
எங்க தொண்டய மிறிச்சு தொண்டுனு சொல்ற வாய் சேராச்சு
 
காவிரியில பலபேர் கால் கழுவ மட்டும் தான் கால் வச்சான்
அப்படி வீணான தண்ணியில விவசாய தமிழன் தான் நெல் வச்சான்
 
பால் குடிச்ச சிசிவோட கழுத்த நெறுச்ச பேய்க்கூட்டம்
உங்கள வெறட்டி அடிச்சு வெளுக்கத்தாண்டா இந்த போராட்டம்
 
தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு'
 
இவ்வாறு பா.விஜய் தனது கவிதையில் கூறியுள்ளார்.