பழிவாங்குமா ராஜஸ்தான்..? பஞ்சாபுடன் இன்று மோதல்!

r
Last Updated: செவ்வாய், 8 மே 2018 (16:37 IST)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பழிவாங்கும் விதத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று களமிறங்க இருக்கிறது.
 
ஐபில் தொடரின் 40-வது ஆட்டம் ஜெயப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது பத்தாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
r
 
ராஜஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறி போய்விடும். எனவே இந்த அணி பஞ்சாப் அணியிடம் முந்தைய போட்டியில் தோற்றதற்கு பழிவாங்கும் விதத்தில் களமிறங்க உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


இதில் மேலும் படிக்கவும் :