புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:30 IST)

டெஸ்ட் போல விளையாடிய திவேட்டியா… ஆனால்? – யாருப்பா நீ என ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவேட்டியா.

ஐபிஎல் தொடரின் 10 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத முதலில் பேட் செய்த பஞ்சாப் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து பேட் செய்த ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித், மற்றும் சஞ்சு சாம்ஸன் ஆகியோர் அதிரடியில் புக, ராஜஸ்தான் அணியும் ரன்ரேட்டும் 10க்கும் மேலே சென்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் ஸ்மித் அவுட்டுக்குப் பின் களத்துக்கு வந்த திவேட்டியா டெஸ்ட் போட்டி போல விளையாடி ரன்ரேட்டைக் கடுமையாக குறைத்தார். இதனால் போட்டி பஞ்சாப் பக்கம் சென்றது. அதனால் ரசிகர்கள் திவேட்டியாவை திட்ட ஆரம்பிக்க, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக காட்ரெல் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ராஜஸ்தான் பக்கம் கொண்டு வந்தார். இதனால் அணியின் வெற்றியும் உறுதியானது.