செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (08:05 IST)

நன்றாக விளையாடும் வரை அணியில் இடமுண்டு… ரஹானே குறித்து பயிற்சியாளர் டிராவிட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டன் ஓவன் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த போட்டியில் இந்திய அணியின் நடுவரிசை வீரர் அஜிங்க்யே ரஹானே 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடி மீண்டும் தன்னுடைய இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ரஹானேவுக்கான இடம் தொடர்ந்து கிடைக்குமா என்பது பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில் “நீங்கள் காயம் காரணமாகவே, அல்லது ஃபார்ம் காரணமாகவோ அணியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உள்ளே வருவீர்கள். நீங்கள் எவ்வளவு காலம் சிறப்பாக விளையாடுகிறீர்களோ அத்தனை காலம் உங்களுக்கு அணியில் இடமுண்டு. இன்னும் பலகாலம் அவர் கிரிக்கெட் விளையாடவேண்டும். அதற்கேற்ற அவர் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.