1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (16:49 IST)

குவிண்டன் டீ-காக் அதிரடி சதம்.. விக்கெட் எடுக்க திணறும் நியூசிலாந்து..!

quinton d kok
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன் குவிண்டன் டீகாக் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.
 
அவர் 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் அவருக்கு இணையாக டூசன் 74 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்  தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான பவுமா 24 ரன்களில் அவுட் ஆனாலும், டீகாக் மற்றும் டூசன் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி வருகின்றனர். 
 
சற்றுமுன் வரை தென்னாபிரிக்க அணி 37 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணி இதே ரீதியில் பேட்டிங் செய்தால் 350 ரன்கள் வரை அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி வென்றால் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது  
 
Edited by Mahendran