செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 அக்டோபர் 2023 (14:13 IST)

நியுசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் வகையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்  தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இருவரும் முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 81 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்க ஆஸி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

கடைசி நேரத்தில் கிளன் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் ஆஸி அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.  நியுசிலாந்து சார்பாக ட்ரண்ட் போல்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.