திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (19:13 IST)

டாஸ் வென்ற பஞ்சாப்.. பேட்டிங் செய்யும் சிஎஸ்கே.. இரு அணி வீரர்கள் விவரங்கள்..!

ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாசில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை அணியை பொருத்தவரை இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் உள்ளது 
 
அதேபோல் பஞ்சாப் அணியும் ஒன்பது போட்டிகளில் விளையாடிய நிலையில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது 
 
பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் வென்றால் இரண்டாவது இடம் செல்ல கூட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ:
 
சிஎஸ்கே: ருத்ராஜ், ரஹானே, மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளெசன், ரகுமான்
 
பஜ்சாப்; பெயர்ஸ்டோ, சாம் கர்ரன், ரிலீ ரோஸ்ஸோ, ஷஷாங் சிங், ஜித்தேஷ் ஷர்மா, ஷர்மா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங், 
 
 
Edited by Siva