ஐபிஎல் 2020: டெல்லி அணிக்கு மாறும் அஸ்வின்

Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (08:15 IST)
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அணிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் அஸ்வின் டெல்லி அணிக்கு மாற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சென்னை, புனே அணிக்காக ஆடிய அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும் பஞ்சாப் அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. இதனால் அஸ்வினுக்கு பதிலாக டெல்லி அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் மற்றும் சுசித் ஆகியோரை பஞ்சாப் அணி ஏலம் எடுக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அஸ்வின் டெல்லி அணிக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த இறுதி முடிவை பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே எடுப்பார் என்றும் கூறப்படுகிறது

7.6 கோடிக்கு அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக டிரென்ட் போல்ட் மற்றும் சுசித் ஆகிய இருவரையும் 2.6 கோடிக்கு மட்டுமே பெற உள்ளதால் அந்த அணிக்கு சுமார் 5 கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி: 3.7 கோடி மட்டுமே மீதமிருப்பதால் அஸ்வின் மாற்றத்தால் கிடைக்கும் ரூ.5 கோடியையும் சேர்த்து முன்னணி வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உள்ளதஇதில் மேலும் படிக்கவும் :