செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (13:59 IST)

டெல்லியில் காற்று மாசு குறைந்தது: பள்ளிகள் திறப்பு!

டெல்லியில் காற்று மாசு குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின.

டெல்லியில் கடந்த வாரத்தில் அதிகரித்த காற்று மாசுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

நாளாக நாளாக காற்று மாசு அதிகரித்து வந்ததால் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாகன கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது.

காற்று மாசு குறைந்துள்ளதால் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட தொடங்கினர். எனினும் இன்னும் பல மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டே தங்கள் அன்றாட வேலைகளை செய்து வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.