அடிபட்ட இடங்களில் எல்லாம் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பேன் – புஜாராவின் மகள்!

Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (17:14 IST)

நடந்து முடிந்துள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இப்போது ஊர் திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி 20 மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா அணியை நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கரைதேற்றினார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் சுவர் போல நின்று விக்கெட்கள் விழாத வண்ணம் ஆடிய அவருக்கு பவுன்ஸர்களாக போட்டு உடலில் பல இடங்களில் அடி கொடுத்தனர் ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள். இந்நிலையில் இப்போது புஜாராவின் மகள் அதிதி ‘அப்பாவுக்கு அடிபட்ட இடங்களில் எல்லாம் முத்தம் கொடுப்பேன். அப்போது காயங்கள் சரியாகிவிடும்’ எனக் கூறினார். இது சம்மந்தமாக புஜாரா ‘என் மகள் கீழே விழும் போதெல்லாம் நான் முத்தம் கொடுப்பேன். அதுபோல இப்போது என் மகளும் அவளுடைய முத்தமும் என் காயங்களை ஆற்றும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :