செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (14:05 IST)

பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: சக மாணவிகள் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 10, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக மாணவிகள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 19ம் தேதி தும்பல் அரசு மருத்துவமனையில் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
 
இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. பள்ளிக்கு  சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட தகவலும் சக மாணவிகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து விடுதியில் தங்கியுள்ள 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது