செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (13:54 IST)

வரி கட்டவில்லை என்றால்... அபராதம் ? வருமான வரித்துறை எச்சரிக்கை !

வரும் ஜூலை 31 ஆம் தேதியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வருமான வரி கட்டுவோர் கணக்கை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையென்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும்  ஜூலை 31 ஆம் தேதிக்குள், வருடத்துக்கு ரூ. 5 லட்சத்துக்குள் உள்ளவர்கள் வருமானவரி தாக்கல் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் ஆகஸ்ட் 1ஆம் நாள் முதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை வருமானவரி தாக்கல் செய்ய ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள், வருடத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வரிகணக்கை தாக்கல்செய்யாமல் விட்டால், ஆகஸ்டு 1 ஆம் நால் முதல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ரூ. 5ஆயிரத்தை அபராதமாக செலுத்தி வருமான வரிகணக்கை தாக்கல்செய்யலாம் என்றும்,  ஒருவேளை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரையிலும் கூட வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம், தேதிமுதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தி வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.