புரோ கபடி போட்டிகள்: டெல்லி, பெங்களூர் அணிகள் அபார வெற்றி

Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (07:45 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் டெல்லி மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அரியானா அணியினர் மிகக் குறைந்த புள்ளிகளை முதல் பாதியில் எடுத்திருந்தனர். இரண்டாம் பாதியிலும் டெல்லி அணியின் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் டெல்லி அணி 41 புள்ளிகளூம், அரியானா அணி 21 புள்ளிகளும் பெற்றதால்
20 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

இதனை அடுத்து அதே மைதானத்தில் நடந்த அடுத்த போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சம அளவில் தங்கள் திறமையை காட்டி விளையாடியதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் பெங்களூர் அணி 30 புள்ளிகளும், மும்பை அணி 26 புள்ளிகளும் எடுத்ததால் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியின் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியின் பின்னர் டெல்லி அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 11 புள்ளிகளும் குஜராத், ஜெய்ப்பூர், பெங்களூரு அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :