புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு தோல்வி

Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (22:28 IST)
புரோ கபடி போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணியுடன்
மோதியது.

இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பல தவறுகள் செய்து விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி பெரும்பாலான நேரங்களில் புள்ளிகளில் பின் தங்கியே இருந்தது.

இறுதியில் பெங்களூர் அணி 48-37 என்ற புள்ளிகணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு இது மூன்றாவது தொடர் தோல்வியாகும். இந்த அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :