வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (07:26 IST)

புரோ கபடி 2024: இன்று புனே அணியுடன் மோதுகிறது தமிழ் தலைவாஸ்.. புள்ளி பட்டியல்..!

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் தலைவாஸ் ஐந்து புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஜெய்ப்பூர் 10 புள்ளிகளுடன் இருக்க, இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் மூன்றாவது இடத்தில் புனே ஆகிய அணிகள் உள்ளன. மூன்று அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில், தமிழ் தலைவாஸ் 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில், மற்றும் குஜராத் 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளன.

நேற்று நடைபெற்ற போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஜெய்ப்பூர் அணி வீழ்த்தியது என்பதும், அதேபோல் பெங்களூரு அணியை உத்தரப்பிரதேச அணி வீழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று புனே அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி விளையாட உள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva