செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி.. 9 தோல்விகளுடன் 11வது இடம்..!

புரோ கபடியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த  விளையாட்டில்  தமிழ் தலைவாஸ் படு மோசமாக விளையாடி வருகிறது. 
 
இதுவரை 12 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 9 போட்டிகளில் தோல்வி அடைந்து மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் அதாவது 11 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 12-வது இடத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உள்ளது.
 
 நேற்று நடந்த போட்டியில் அரியானா அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைத்தது என்பதும்  அரியானா அணி 36 - 31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலில் புனே, ஜெய்ப்பூர், டெல்லி,  ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
 
Edited by Siva