திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:10 IST)

இதுக்கு தான் நீட் தேர்வு வைக்கப்படுகிறது: ப்ரியாவின் பயிற்சியாளர் பேட்டி

priyaa
இதுக்கு தான் நீட் தேர்வு வைக்கப்படுகிறது: ப்ரியாவின் பயிற்சியாளர் பேட்டி
கால்பந்து வீராங்கனை ப்ரியா மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த நிலையில் இதற்கு தான் தரமான மருத்துவர்களை உருவாக்க நீட்தேர்வு வைக்கப்படுகிறது என ப்ரியாவின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
 
கால்பந்து விளையாட்டில் கடலில் கிடைக்காத முத்துப்போன்ற வீராங்கனை ப்ரியா என்றும் சிறுத்தை போல் அவர் ஓடக்கூடியவர் என்றும் அவரது பயிற்சியாளர் கோயல் தெரிவித்துள்ளார் 
 
ப்ரியாவுக்கு 6 அறுவை சிகிச்சை மற்றும் 40 தையல் எதற்காக போட்டார்கள் என கேள்வி எழுப்பிய ஜோயல் சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இல்லாததால்தான் அரசு மருத்துவமனையில் ப்ரியா அனுமதிக்கப் பட்டார் என்றும் அறுவை சிகிச்சை முடிந்ததும் காலில் கட்டப்பட்ட கட்டுக்களை அகற்றாமல் மருத்துவர்கள் இருந்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மருத்துவமனையில் இருக்கும் போது மிக தைரியமாக நான் மீண்டு வருவேன் என்று ப்ரியா நம்பிக்கை அளித்தார் என்றும் இந்திய கால்பந்து அணி ஒரு சிறந்த வீராங்கனையை இழந்து விட்டது என்றும் தெரிவித்தார்
 
மருத்துவரின் அலட்சியத்தால் இந்த துயரம் நிகழ்ந்து உள்ளதாகவும் இதற்காக தான் தரமான மருத்துவர்களை உருவாக்க நீட்தேர்வு வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran