ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (11:42 IST)

அடுத்த ஆண்டுடன் நீட் தேர்வு ரத்து? அதற்கு பதில் என்ன தேர்வு?

NEET
தற்போது இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
சமீபத்தில் நடந்த தேசிய மருத்துவ கமிஷனின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டுடன் நீட் தேர்வை ரத்து செய்ய உள்ளதகவும், 2024-25 கல்வியாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
எனவே தற்போதைய நீட் தேர்வு முதுநிலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு உடன் முடிவுக்கு வரும் என்றும் அதற்கு அடுத்த 2024 - 25 ஆம் கல்வி ஆண்டின் போது நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva