அடிமேல் அடி – மீண்டும் பிருத்வி ஷாக்கு வந்த சிக்கல் !

Last Modified புதன், 8 ஜனவரி 2020 (11:41 IST)
இந்திய அணியின் இளம்வீரரான பிருத்வி ஷா மீண்டும் தோல்பட்டை காயத்தால் ஏ அணிக்கு விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் பிருத்விஷா ஊக்கமருந்துகளை தெரியாமல் பயன்படுத்தி தடைக்குள்ளானார். தடை முடிந்து தற்போது ஏ அணிக்காக விளையாடி வரும் அவர் மீண்டும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஓவர் த்ரோ ஒன்றை தடுக்கும் முயற்சியில் இடது தோள்பட்டைக் காயமடைந்தார் பிரிதிவி ஷா. தொடர்ந்து காயங்களால் அவர் அவதிப்பட்டு வருவதால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :