இந்தியாவின் அபார பந்துவீச்சில் குறைந்த ஸ்கோரில் சுருண்ட இலங்கை:

Last Modified செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:41 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இந்தூரில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின்
முன்னணி பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவருமே சொதப்பியதன் காரணமாக இலங்கை அணியை மிகக் குறைந்த ஸ்கோரில் சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், சயினி மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசினர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் சயினி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெராரே 34 ரன்களும் பெர்னாண்டோ 22 ரன்களும் குணதிலக 20 ரன்களும் டி சில்வா 17 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 143 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :