1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:44 IST)

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவு இல்லை. விராத் கோஹ்லி

பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக்கு தேவையான 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடினர். ஆனால்  அஸ்வினின் அபார பந்துவீச்சு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில்  அந்த அணி 112 ரன்களுக்கு சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணியினரை மிகவும் லேசாக நினைத்து ஆடிய ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.




ஆஸ்திரேலிய அணியினர்களின் ஆட்டம் குறித்து விராத் கோஹ்லி கருத்து தெரிவிக்கையில், 'மைதானத்தில் இந்திய வீரர்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவ்வளவு அறிவு இல்லை என நினைக்கிறேன். அதனால் தான் அவர்கள் அடுத்தவர்களின் அறிவுரையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.. இதற்கு பெயர் என்ன என்பதை ஏற்கனவே மக்கள் வைத்து விட்டார்கள். அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். ஆக்ரோஷமாக சீண்டி விட்டு விளையாடுவது ஒரு விதம், இது என்ன ரகம் என்றே கணிக்க முடியவில்லை,’ என்று கூறினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் முதல் போட்டியில் வெற்றி பெற்றதும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.