திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (13:38 IST)

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளிய பிரக்ஞானந்தா! – இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்!

Rameshbabu Praggnanandhaa
இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக சாதனை படைத்துள்ளார்.



சமீப காலங்களில் சதுரங்க விளையாட்டில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உலக அளவில் பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் செஸ் விளையாட்டில் தற்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா. இவரது சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டு வீராங்கனைதான். சமீபத்தில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜூனா விருதை வைஷாலி பெற்றார்.

இந்நிலையில் தற்போது பிரக்ஞானந்த புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை முறியடித்து இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தகுதி முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா. விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 செஸ் ப்ளேயராக மாறியுள்ளார்.

Edit by Prasanth.K