100வது டி20 போட்டியில் விளையாடும் முதல் மே.இ.தீவுகள் வீரர்!
நூறாவது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடும் முதல் மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர் பொல்லார்டு பெற்றுள்ளார்
இன்று அவர் இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விளையாடும் நிலையில் இந்த போட்டி அவருக்கு 100வது சர்வதேச டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மேற்கிந்திய வீரர் பொல்லார்டுக்கு 100 என்ற எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அவரது அணியினர் வழங்கியுள்ளனர். மேலும் அவருக்கு அணியினர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர் என்பதும் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது