ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (18:43 IST)

2-வது டி20 போட்டி: டாஸ் வென்றது மே.இ.இந்தியா!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று கொல்கத்தா மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் சற்றுமுன் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் விளையாடுகிறது என்றும் இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது