செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (10:45 IST)

ஷாகித் கபூரின் ஜெர்ஸி திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கேஜிஎப் 2 வோடு மோதல்!

ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெர்ஸி திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஜெர்ஸி. 36 வயதில் ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடுவதே அந்த படத்தின் கதை. வழக்கமான ஸ்போர்ட்ஸ் ட்ராமா படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக அமைந்த இந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்ப்பட்டுள்ளது. தெலுங்கில் இயக்கிய இயக்குனர் கௌதம் தின்னமுரியே இந்தியிலும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் கேஜிஎப் 2 படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ரிலிஸில் இருந்து பின் வாங்கியதால் ஜெர்ஸி திரைப்படத்தை படக்குழுவினர் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.