மூன்று ஆண்டுகளாக விளையாடாத பொல்லார்டுக்கு கேப்டன் பதவி – ஹோல்டர் நீக்கம் !
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக விளையாடாத கைரன் பொல்லார்டு இப்போது டி 20 அணிக்கும் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக விளையாடி வருவதால் ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கபட்டு அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணியின் கேப்டன் பொறுப்பும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைரன் பொல்லார்டு கடந்த 3 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கிறது. அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். அடுத்த உலகக்கோப்பைக்கு ஏற்ப அணியை இப்போதில் இருந்தே தயார் செய்ய பணிகளைத் தொடங்குவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.