முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ’மிதாலி ராஜ்’ டி -20 யில் இருந்து ஓய்வு ..

mithali raj
Last Updated: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:19 IST)
நம் இந்தியாவில் வேறெந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அவர்களுக்கு பிடித்த வீரர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட தவறியதில்லை. இந்நிலையில் முன்னாள்  இந்திய பெண்கள் கிரிகெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (36) டி -20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெண்கள் இந்திய கிரிக்கெட்டில்  சச்சின் என மிதாலி ராஜ் அழைக்கப்படுகிறார்.அத்தகைய சாதனைகளையும் இவர் படைத்துள்ளார். 
 
கடந்த 1999 ஆம் ஆண்டு டி - 20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 89 டி - 20 போட்டிகளில் விளையாடி மொத்தம்  2364 ரன்களை எடுத்துள்ளார். 
 
அதுமட்டுமின்றி டி -20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கணைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.இவரது சராசரி 37. 5 ஆகும். மிதாலியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :