ஷாரூக்கான் அணியில் சேர்ந்த தினேஷ் கார்த்திக்!?: கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்

dinesh karthi
Last Modified சனி, 7 செப்டம்பர் 2019 (12:38 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை மீறியதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை உள்ளிட ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியவர்.

வெஸ்ட் இண்டீசில் தற்போது நடைபெற்று வரும் சிபிஎல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் பங்கேற்று விளையாடியிருக்கிறார். ஆனால் அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் உரிய அனுமதியை பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கிரிக்கெட் வாரியம் தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிபிஎல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக கலந்து கொண்ட ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி இந்தி நடிகர் ஷாரூக் கானுக்கு சொந்தமானது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் பலர் தங்களை களத்தில் இறங்கவே வாய்ப்பளிப்பதில்லை, வேறு நாட்டு ஆட்டங்களில் பங்கேற்கவும் அனுமதிப்பதில்லை என்று சமீப நாட்களில் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் பல வீரர்கள் தாங்களாகவே அணியிலிருந்து வெளியேறினார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த செயல்பாடு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :