திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (09:29 IST)

லாஸ்லியாவிற்காக விட்டுக்கொடுத்த வனிதா-தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்ட வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய மூவருக்கும் இன்று ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாக வனிதா கூறுகின்றார்
 
 
பிக்பாஸ் போட்டியில் நாம் ஒவ்வொருவரும் ஜெயிப்பதற்காகத்தான் வந்திருக்கின்றோம். விட்டுக்கொடுக்க அல்ல என்று இரண்டு நாட்களுக்கு முன் ஆவேசமாக பேசிய வனிதா, இன்று ஒரு சாதாரண டாஸ்க்கை செய்ய முடியாமல் விட்டுக்கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. 
 
 
சேரன் வெளியேற்றப்பட்டதில் இருந்தே மக்கள் மீதும் பிக்பாஸ் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கும் வனிதா, தொடர்ந்து போட்டியில் விளையாட விருப்பம் இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. வனிதா மட்டுமின்றி தர்ஷனும் விட்டுக்கொடுப்பது லாஸ்லியாவுக்கு அதிர்ச்சியளிக்கின்றது
 
 
விட்டுக்கொடுத்து கிடைத்த வெற்றி தனக்கு தேவையில்லை என்றும் கேப்டன் பொறுப்பை தான் ஏற்கப்போவதில்லை என்றும் லாஸ்லியா கூறுகின்றார். இதனையெல்லாம் சேரன் சீக்ரெட் அறையில் இருந்து பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது